ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா

வேளாங்கன்னி

வேளாங்கன்னி

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற தூய ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் போர்ச்சுகீசியர்களால் 1671ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட பெரிய ஆலயமாக கட்டப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி  வருடா வருடம் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம்.

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக  பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லாதால் வெறிச்சோடி காணப்பட்டது.

கொடியேற்று நிகழ்வை முன்னிட்டு முன்னதாக அன்னை மாதா உருவம் பொறித்த பிரம்மாண்ட வண்ணக் கொடி ஊர்வலமாக தேவாலய வளாகத்திலேயே எடுத்துச் செல்லப்பட்டது.

வழக்கமாக மாதா உருவம் பொறித்த கொடி பேராலயத்தில் இருந்து கடற்கரைச் சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஆண்டு கொரோனோ தொற்றின் காரணமாக பேராலயத்தின் வளாகத்திலேயே எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து பேராலயத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்ட கொடி  வாயிலுக்கு வந்தடைந்தது.

அப்பொழுது தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். தொடர்ந்து பேராலய வாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் 90 அடி உயர கொடிமரததில் மாதா உருவம் பொறித்த பிரமாண்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் என 40 நபர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி பெரிய தேர் பவனியும் செப்டம்பர் 8ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா முடிவடையும்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் இன்று கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு வேளாங்கண்ணியில் உள்ள 600க்கும் மேற்பட்ட கடைகள் 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மூடபட்டுள்ளது. நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூக்கார தெரு செருதூர் வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 13 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து பக்தர்கள் யாரும் உள்ளே வராத அளவிற்கு சோதனை செய்து வருகின்றனர். இன்று தொடங்கும் விழாவானது மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8-ஆம் தேதி சிறப்பு திருப்பலியுடன் முடிவடையும்.

First published:

Tags: Nagapattinam