Home /News /tamil-nadu /

TN Farmers | கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு... காவல்துறையினர் விசாரணை

TN Farmers | கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு... காவல்துறையினர் விசாரணை

தமிழ்நாடு விவசாயிகள்

தமிழ்நாடு விவசாயிகள்

TN Farmers | மர்ம நபர்கள் நெல் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 125 நெல் மூட்டைகளை திருடி சென்றுள்ளனர்.

    நாகை அருகே அகர ஒரத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் வாசல் கேட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 நெல் மூட்டைகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் அகர ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது.



    இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாட்ச்மேன் நேற்று இரவு விடுப்பு எடுத்து உள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் நெல் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 125 நெல் மூட்டைகளை திருடி சென்றுள்ளனர். நெல் கொள்முதல் நிலைய பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் பருவகால உதவியாளர் பாக்யராஜ் தகவல் தெரிவித்தனர்.



    இதுகுறித்து பாக்யராஜ் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். நெல் மூட்டைகளை திருடி சென்றவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் போதிய பாதுகாப்பு அளிக்கவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Nagapattinam

    அடுத்த செய்தி