Home /News /tamil-nadu /

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : தமிழக மீனவர்கள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சை

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : தமிழக மீனவர்கள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Nagapattinam : வெட்டுக்காயம் அடைந்த மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். வெட்டுக் காயத்துடன் தமிழக மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    நாகப்பட்டினம் ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த வசந்தபாலன், நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகிய 4 மீனவர்களும் நேற்று மதியம் நாகையில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.

    மீனவர்கள் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு படகில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 8 பேர் திடீரென்று தமிழக மீனவர்களின் படகில் ஏறி மீனவர்களை தாக்கியுள்ளனர். மேலும் மணிவண்ணன், வசந்தபாலன், நிர்மல், தில்லைநாதன் ஆகிய 4 மீனவர்களையும் அரிவாளால் கொண்டு தாக்கியதில், வெட்டுக் காயத்துடன் வலியில் துடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது படகில் இருந்த 60 ஆயிரம் மதிப்புடைய மீன்கள், 2 செல்போன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள், படகு இன்ஜின் உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டனர். காயம்பட்ட 4 மீனவர்களும் அவசரம் அவசரமாக அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கொண்டு வரப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றனர்.

    படகின் உரிமையாளர் மகன் வசந்தபாலனுக்கு கை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயம் மற்றும் நிர்மலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Read More : நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம் உறுதி

    தில்லைநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Must Read : மதுபோதையில் அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பி கைது

    கடந்த இரண்டு நாளில் அடுத்தடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குவது நாகை மாவட்ட மீனவர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : பா.பாலமுத்துமணி, நாகப்பட்டினம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Fishermen, Nagapattinam, Sri Lanka

    அடுத்த செய்தி