ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'டீ குடிக்க ரூ.100, நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40' ... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - வைரலாகும் வீடியோ

'டீ குடிக்க ரூ.100, நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40' ... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - வைரலாகும் வீடியோ

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி சுரண்டித் தின்னும் அதிகாரிகள்

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி சுரண்டித் தின்னும் அதிகாரிகள்

Viral Video : டீ குடிக்க காசு முதற்கொண்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இளங்கோ பட்டியல் எழுத்தர் பாஸ்கர் கேட்ட லஞ்ச பணத்தை அவருக்கு கொடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாகை அருகே பிரதாபராமாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர்  விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சம்பா சாகுபடி முடிந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாக புகார் இருந்து வருகிறது. இதனிடையே நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமாபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

  தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோ என்பவர் தன்னுடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு நிலையம் சென்றுள்ளார். அவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த  நிலையத்தின் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் உள்ளிட்ட ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் என 1940 ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இளங்கோ பட்டியல் எழுத்தர் பாஸ்கர் கேட்ட லஞ்ச பணத்தை அவருக்கு கொடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூட்டைக்கு 40 ரூபாய் என 1940 ரூபாய் லஞ்சம் வாங்கியது மட்டும் இல்லாமல், அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு டீ வாங்கி கொடுப்பதற்கு தனியாக 100 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுமாறு அந்த விவசாயிடம் ஊழியர்கள் பேசும் பரபரப்பு வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Viral Video