இருநூற்றாண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகுஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன. தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் ஆமை குஞ்சுகள் கடலுக்கு ஊர்ந்து சென்றன.
கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் 250 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய ஆலிவ் ரிட்லி அரியவகை ஆமைகளின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. காலநிலை சூழ்நிலைக்கு ஏற்ப நாகை மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள் அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன.
இந்நிலையில் முட்டைகளை சேகரித்து வரும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் சீர்காழி, நாகை, கோடியக்கரை பகுதிகளில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொறிக்க செய்து கடலில் விடுகின்றனர். அதன்படி நாகை, சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 4000 முட்டைகளில் இருந்து 800 ஆலிவ் ரெட்லி ஆமைகள் குஞ்சு பொரித்தன.
இதனை இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், வன உயிரின காப்பாளர்யோகேஷ் குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று கடலில் விட்டனர். அப்போது பிறந்த குஞ்சுகள் தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் ஆமை குஞ்சுகள் கடலுக்கு ஊர்ந்து சென்றன.இயற்கை மாற்றங்களால் ஆமையினபெருக்கம் 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலுக்கு பிறகு குறைந்த நிலையில், இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 30 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரித்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டு 57 ஆயிரம் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு தற்போது வரை குஞ்சு பொரித்த 25 ஆயிரம் ஆமைகுஞ்சுகள் கடல் பகுதிகளில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : பாலமுத்துமணி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.