”ஒரு குடம் நீருக்கு உச்சி வெயிலில் நிற்க வேண்டும்”! தண்ணீரின்றி தவிக்கும் நாகை மாவட்ட மக்கள்

மஞ்சள் நிறத்தில் வரும் நீரையே பயன்படுத்தி சமைத்து வருவதால், தலைவலி, காய்ச்சல், வாந்திபேதி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய் தொற்றுகளால் அல்லல் படுவதாக காரப்பிடாகை கிராம மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.

”ஒரு குடம் நீருக்கு உச்சி வெயிலில் நிற்க வேண்டும்”! தண்ணீரின்றி தவிக்கும் நாகை மாவட்ட மக்கள்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
நாகை மாவட்டத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள் ஒரு குடம் நீருக்காக உச்சி வெயிலில் நாள் முழுவதும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நாகை மாவட்ட மக்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிலும் நாகை மாவட்டத்தின் கிராமப்புற மக்களின் நிலை படுமோசம்.  நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை கிராமத்தில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு போனதால், அங்குள்ள மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் தெற்கு தெருவில் உள்ள வறண்டு கிடந்த அய்யனார் கோவில் குளத்தில் ஊற்று தோண்டி அதில் சுரக்கும் சுகாதாரமற்ற நீரை குடித்து வருகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த 100 குடும்பங்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்காத காரணத்தால் அப்பகுதியில் உள்ள தெரு குழாய்கள் மண்ணுக்குள் புதைந்து காட்சி பொருளாக மாறிவிட்டன.

மேலும்,  ஒரு குடம் தண்ணீர் பிடிக்கவே உச்சி வெயிலில் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி பெண்கள், மஞ்சள் நிறத்தில் வரும் நீரையே பயன்படுத்தி சமைத்து வருவதால், தலைவலி, காய்ச்சல், வாந்திபேதி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய் தொற்றுகளால் அல்லல் படுவதாக வேதனையோடு கூறுகின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக அப்பகுதியில் கைப்பம்பு மற்றும் தெருக்குழாய்கள் எதுவும் அமைத்து தரப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், குக்கிராமங்களுக்கு குடிநீர் முழுமையாக சென்றடையவில்லை.

எனவே உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி கிராமங்கள் தோறும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also watch: கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்துப் பெண்கள்

First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading