Home /News /tamil-nadu /

நான் ஒரு ஐபிஎஸ்.. குஜராத் டிஐஜி.. என்கிட்ட காசுகேட்குற.. மோசடியில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமி கைது

நான் ஒரு ஐபிஎஸ்.. குஜராத் டிஐஜி.. என்கிட்ட காசுகேட்குற.. மோசடியில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமி கைது

மோசடி நபர் கைது

மோசடி நபர் கைது

குஜராத் டிஐஜி எனக்கூறிக்கொண்டு நாகையில் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  வடமாநில டிஐஜி எனக்கூறி நாகையில் பல்வேறு இடங்களில் நூதன மோசடி ஈடுபட்ட நபரை போலீசார் இன்று கைது செய்தனர் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

  நாகை புதிய கடற்கரை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கடந்த 24 ம் தேதி இரவு கடைக்கு பொருட்கள் வாங்க காரில் டிப்டாப் நபர் ஒருவர் வந்துள்ளார் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். உடனே கேசியர் வாங்கிய பொருட்களுக்கு பில்லை கொடுத்து பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் பணம் தராமல்  வெளியேற முயன்றுள்ளார். சூப்பர் மார்க்கெட் ஊழியர் பொருட்களுக்கான பணத்தை கேட்ட போது காரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். உடனே கேசியர் விக்னேஷ்வரன் கார்டு இயந்திரத்துடன் காருக்கு அருகில் சென்றுள்ளார்.

  Also Read : பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு.. காதல் மனைவியை அடித்துவிரட்டிய கணவன் - குழந்தையுடன் நடுத்தெருவில் நிற்கும் பெண்

  கார்டு இயந்திரத்தில் ஏடிஎம் கார்டு மூலமாக பணம் செலுத்திய காருக்குள் இருந்த நபர் தன்னை  மகேந்திர வர்மா என்றும், தன்னை ஐபிஎஸ்.,அதிகாரி எனவும் குஜராத்தில் டிஐஜியாக இருப்பதாக கூறியுள்ளார். நாகை எஸ்பியை நான் கூப்பிட்டால் உடனே வருவார். அப்படி இருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டியுள்ளார். இதில் சந்தேகமடைந்த  விக்னேஷ்வரன் இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐபிஎஸ் அதிகாரி என மிரட்டியவரை தேடி வந்தனர்.

  Also Read:  வாக்கிங் வரும்போது மட்டும் திருடும் விநோத திருடன்.. திருப்பூரில் கைது

  இந்நிலையில் கடந்த  28-ம்தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழ கடை வைத்திருக்கும்  ரவி என்பவர் காரில் வந்த ஒரு நபர்  ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கிகொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றதாக வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இரண்டு புகார்களையும் பெற்றுக்கொண்ட வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இரு சம்பவங்களிலும் ஒரே நபர்தான் மிரட்டி சென்றது என உறுதி செய்துகொண்டு அவரை தேடி வந்தனர்.

  இந்நிலையில் நாகூர் அடுத்த மேல வாஞ்சூர் சோதனை சாவடி அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை  அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா ஜமீன் புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மகேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

  கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த கவிதா என்பவரிடம் ஓட்டுனராக வேலைக்கு சென்றுள்ளார். கவிதா பணி மாறுதல் மற்றும் பணி உயர்வு பெற்று வேலூர் வாணியம்பாடி தஞ்சாவூர் நாகை போன்ற இடங்களில் வேலை பார்த்த போது அவருடன் டிரைவராக இருந்து வந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்து தற்சமயம் நாகை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் காவல் ஆய்வாளராக உள்ள கவிதா ஓட்டுநர் மகேஷ் உடன் வாழ்ந்து வருகிறார். அவரே மகேஷை மகேந்திர வர்மா என்றும் இவரது தந்தை அலோக் வர்மா என்றும் மகேந்திர வர்மா வடமாநிலத்தில் டிஐஜியாக வேலை பார்த்து வருவதாக கூறி அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

  காரில் டிப்டாட் ஆப் உடையுடன் வலம் வந்த மகேந்திர வர்மா என்கிற மகேந்திரன் நாகையில் பல்வேறு இடங்களில் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என கூறி மிரட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது மேலும் காவல்துறையில் உள்ள சிலரிடமும் டபுள் புரமோஷன் வாங்கி தருவதாக கூறி மகேந்திரவர்மா பீலா விட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. நாகை எஸ்பி முகாம் அலுவலகத்திற்கு  சில அடி தூரத்திலேயே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நான் அழைத்தால் எஸ்.பி. ஜவகர் இங்கு வருவார் அவர் எனக்கு ஜூனியர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட மகேந்திர வர்மா என்கிற மகேந்திரனை வெளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஆய்வாளர் கவிதாவிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் துறைரீதியிலான  விசாரணை நடைபெற்று வருகிறது.

  செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ் (நாகை)


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Fraud, News On Instagram, Police

  அடுத்த செய்தி