ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டவிரோதமாக ஜோராக நடக்கும் கள்ளச் சாராயம் விற்பனை.. கிராம மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 3 பேர் கைது

சட்டவிரோதமாக ஜோராக நடக்கும் கள்ளச் சாராயம் விற்பனை.. கிராம மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 3 பேர் கைது

சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை

சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை

காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படும்  கள்ளசாராயம்  இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாகை அருகே கள்ளச் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  நாகப்பட்டினம் மாவட்டம் இறையான்குடி கிராம மக்களின்  ஒற்றுமையால் இந்த பகுதியில் கள்ளச் சாராயம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படும்  கள்ளசாராயம்  இறையான்குடி மற்றும் சிங்கமங்கலம் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்  வலிவலம் காவல் நிலையத்தில் புகாரளிக்க இறையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்திய வலிவலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன்  இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சிங்கமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் (42), இறையான்குடி படுகைத்தெருவைச் சேர்ந்த நாகப்பன் (49), கீழவிடங்கலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ்(30) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

  பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து காவல்துறை விரைந்து மூவரை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  செய்தியாளர் : பாலமுத்துமணி

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Nagapattinam