Home /News /tamil-nadu /

வேளாண் கல்லூரி அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு - விவசாயிகள் திடீர் போராட்டம்

வேளாண் கல்லூரி அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு - விவசாயிகள் திடீர் போராட்டம்

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயிகள் எதிர்ப்பு

Nagapattinam District : விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் கல்லூரியை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    கீழ்வேளூர் அருகே குத்தகை விவசாய நிலங்களை கையகப்படுத்தி வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் கல்லூரி அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய கோரி வலியுறுத்தியுள்ளனர்.

    நாகை மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கீழ்வேளூர் பகுதியில்  வேளாண் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலுக்கு சொந்தமாக சுமார் 250 ஏக்கர் விளைநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புத்தர்மங்கலம் மற்றும் வடக்குவளி கிராமத்தில் உள்ள விளை நிலத்தை  மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு அலுவலர்கள்  விவசாயிகளின் ஒப்புதலின்றி நில அளவை மற்றும் மரங்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இதனை கண்ட  அப்பகுதி குத்தகை விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குத்தகை தாரர்களான  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி  கீழ்வேளூர் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாதிப்பிற்குள்ளாகும் விவசாய நிலம்


    மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் கல்லூரியை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.நாகப்பட்டினம்-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடித்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    செய்தியாளர் : பாலமுத்துமணி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Farmers, Nagapattinam

    அடுத்த செய்தி