Home /News /tamil-nadu /

மாப்பிள்ளை வீரன் திருமேனியம்மன் கோயில் திருவிழா - வாழைப்பழங்களை வாரி இறைத்து நூதன வழிபாடு

மாப்பிள்ளை வீரன் திருமேனியம்மன் கோயில் திருவிழா - வாழைப்பழங்களை வாரி இறைத்து நூதன வழிபாடு

வாழைப்பழங்களை வாரி இறைத்து நூதன வழிபாடு

வாழைப்பழங்களை வாரி இறைத்து நூதன வழிபாடு

நாகை மாவட்டம் தகட்டூரில் உள்ள மாப்பிள்ளை வீரன் திருமேனியம்மன் கோயிலில் பங்குனி மாதம் திருவிழா நடத்தப்படும்.

  • News18
  • Last Updated :
    வேதாரண்யம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், வாழைப் பழங்களை வாரி இறைத்து பக்தர்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம் தகட்டூரில் உள்ள மாப்பிள்ளை வீரன் திருமேனியம்மன் கோயிலில் பங்குனி மாதம் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக வாழைப்பழங்களை வாரி இறைத்து அதனை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்துச் செல்லும் விநோதமான வழிபாடு நடத்தப்படுகிறது.

    இதில் கிடைக்கும் வாழைப்பழங்களை சாப்பிடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில், வாழைப்பழங்கள் வாரி இறைக்கப்பட்டன. அதனை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர்.

    Also read... வேலூர் மாவட்டத்தில் தொழிற் பூங்கா அமைக்க திட்டம் - தங்கம் தென்னரசு உறுதி

    மேலும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மனிதன் மற்றும் விலங்குகளின் சிலைகளை கோயிலில் வைத்தும் வழிபட்டுச் சென்றனர்.

    -செய்தியாளர்: பால முத்துமணி
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Nagai, Vedaranyam

    அடுத்த செய்தி