Home /News /tamil-nadu /

TASMAC | மதுபிரியர்கள் அட்டூழியம்...பேருந்தின் கண்ணாடி உடைப்பு - திடீர் போராட்டத்தில் குதித்த பெண்கள்

TASMAC | மதுபிரியர்கள் அட்டூழியம்...பேருந்தின் கண்ணாடி உடைப்பு - திடீர் போராட்டத்தில் குதித்த பெண்கள்

மதுபிரியர்கள் அட்டூழியம்

மதுபிரியர்கள் அட்டூழியம்

TASMAC | நாகை அருகே மதுப்பிரியர்கள் மதுபோதையில் மினி பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பேருந்தில் உள்ள பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்ததோடு நாகப்பட்டினம் - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
    நாகப்பட்டினம் மாவட்டம் அகர ஒரத்தூர் , தென்கால் ஒரத்தூர், ஆய்மழை ,சிக்கல் கலசம் பாடி, மகாதானம் பாலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாகப்பட்டினம் கடைத்தெருவில் அமைந்துள்ள ஜவுளிக்கடை, மளிகை கடை, பல்பொருள் அங்காடி உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    வழக்கம்போல் பணி முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தனியார் மினி  பேருந்தில் வீடு திரும்பினர். சிக்கல்  ரயில்வே கேட் அருகே ஆட்டோவை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சிலர் மது அருந்தி உள்ளனர். இதனை பேருந்து நடத்துனர் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்துக்கு வழிவிடும் படி கேட்டுள்ளார். மது போதையில் இருந்த அந்த ஆசாமிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடுமையாகத் தாக்கியதோடு பேருந்தில் அமர்ந்து இருந்த பெண்களை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் திட்டியதோடு  கருங்கற்களால் பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளனர்.

    ALSO READ |   ஜெர்மன் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி மணந்த இளம் தொழிலதிபர்.. ஆரணியில் அமோகமாக நடந்த திருமணம்
     இதில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. 10 பேர் சேர்ந்து அடித்ததாக போராடிய பெண்கள் தெரிவித்துள்ளனர்.



    இதனால் பேருந்தில் உள்ள பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்ததோடு நாகப்பட்டினம் டு திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது   பணி முடித்து இரவு நேரங்களில் வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் பயணம் செய்த பெண்களை தரக்குறைவான வார்த்தையில் திட்டிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

    செய்தியாளர் : பாலமுத்துமணி.பி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Nagapattinam, Tasmac

    அடுத்த செய்தி