ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலங்கைக்கு கடத்தவிருந்த 147 கிலோ கஞ்சா பறிமுதல்... நாகையில் 4 பேர் கைது

இலங்கைக்கு கடத்தவிருந்த 147 கிலோ கஞ்சா பறிமுதல்... நாகையில் 4 பேர் கைது

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வேதாரண்யம் அருகே சுமார் 36.75 லட்சம் மதிப்பீட்டிலான  147 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை இலங்கைக்கு கடத்தவிருந்த வழக்கறிஞர் உட்பட  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நாகை மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வேதாரண்யம் அடுத்துள்ள  நெய் விளக்கு கடைத்தெரு பகுதியில் வந்த 2 காரை மறித்து தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

  அப்பொழுது காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது சுமார் 36.75 லட்சம் மதிப்பிலான 64  பொட்டலங்களில் 147 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய போலீசார் நான்கு பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காரையும் பறிமுதல் செய்தனர்.

  கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகிய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரபோஜி, வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமாறன்  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரமன் மற்றும் போத்துராஜா உள்ளிட்ட 4 பேர் வேதாரண்யம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  மேலும் இதுபோன்ற கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் : பாலமுத்துமணி 

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Cannabis, Crime News