நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam) நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் பாஸ்கரன் இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான மூங்கில் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நல்லபாம்பு மற்றும் சாரைப் பாம்புகள் உள்ளது. இந்த பகுதியில் அவ்வப்போது மயில்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் பாம்புகள் அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளது. 11 மாதங்களில் இப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மயிலுக்கு பயந்து குடியிருப்பு பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு (Snake Rescue) தஞ்சமடைந்தது. இதனைக்கண்ட பாஸ்கரனின் மனைவி வசந்தி அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டனர், இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாம்பு பிடிக்கும் நவீன கருவி மூலம் 10 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்னர்.
Also Read : ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் பலி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி
இதையடுத்து மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். தொடர்ந்து பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு சொந்தமான மூங்கில்களை வெட்ட உத்தரவிட்டு தங்களை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : பாலமுத்துமணி, நாகப்பட்டினம் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.