Home /News /tamil-nadu /

லஞ்சம் வாங்கியதால் பணியிட மாற்றம்... நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்த இன்ஸ்பெக்டர்...! சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி உத்தரவு

லஞ்சம் வாங்கியதால் பணியிட மாற்றம்... நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்த இன்ஸ்பெக்டர்...! சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி உத்தரவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் சிவப்பிரகாசம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் சிவப்பிரகாசம்

லஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தால் ஆய்வாளர் சிவபிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார் வந்ததால் நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவர் வெளிப்பாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க லஞ்சம் பெற்றதாக கடந்த 20 ஆம் தேதி நாகை எஸ்பிக்கு புகார் வந்தது.

அதனை தொடர்ந்து அவரை ஆயுதப்படைக்கு சென்று பணியில் சேருமாறு எஸ்பி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆய்வாளர் சிவபிரகாசம் ஆயுதப்படைக்கு செல்லாமல் நாகை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த எஸ்.பி செல்வநாகரத்தினம் ஆய்வாளர் மீது வந்த புகார்களை வைத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர் லஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தால் ஆய்வாளர் சிவபிரகாசத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடைகளில் மிரட்டி லஞ்சம் பெற்றதாக சீர்காழியை சேர்ந்த பெண் காவலர் சில தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாகையில் மீண்டும் ஒரு லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Nagai

அடுத்த செய்தி