Home /News /tamil-nadu /

கனமழை காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை விடுமுறை

மழை விடுமுறை

கனமழை காரணமாக, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam | Thanjavur | Mayiladuthurai | Thiruvarur
    கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.  நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் மழை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  அருண்தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும்  மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையே, நேற்று திண்டுக்கல் நகரில் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல சின்னாளபட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம், தாடிக்கொம்பு, மாரம்பாடி, வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.



    கொடைக்கானலில் ஆனந்தகிரி, அப்சர்வேட்டரி, பேருந்துநிலைய‌ம், அண்ணாசாலை, ஏரிச்சாலை, ஆன‌ந்த‌கிரி, உள்ளிட்ட ப‌குதிக‌ளிலும், தாண்டிக்குடி, ஊத்து, கூட‌ம்ந‌க‌ர், ம‌ன்ன‌வ‌னூர், கூக்கால், கிளாவ‌ரை, போலூர் உள்ளிட்ட‌ ம‌லைக் கிராம‌ப் பகுதிகளிலும் மழை பெய்தது, தொடர் மழை காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிரும் நிலவி வருகிறது. தேனி, ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதையும் படிங்க: வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது

    பலத்த மழை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வள்ளிபட்டி பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கடுத்தது.அப்போது காவல்துறை எச்சரிக்கையும் மீறி 6 பேர் ஒரு காரில் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் நல்வாய்ப்பாக தடுப்பு கம்பி ஒன்றில் சிக்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள், அதன் மேல் ஏறி உயிர் தப்பினர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: College, Holiday, Nagapattinam, School

    அடுத்த செய்தி