சொந்தச்செலவில் வாய்க்கால் தூர்வாரும் இளைஞர்கள்: மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்..

நாகையில் உள்ள ஓர் ஊராட்சியில் தம் சொந்தச் செலவில் இளைஞர்கள் வாய்க்கால்களைத் தூர்வாரி வருகின்றனர்.

சொந்தச்செலவில் வாய்க்கால் தூர்வாரும் இளைஞர்கள்: மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்..
சொந்தச் செலவில் வாய்க்கால் தூர்வாரும் இளைஞர்கள்
  • Share this:
நாகை மாவட்டம் மஞ்சக்கொள்ளை ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டும் அந்தப் பகுதி வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேரவில்லை.

ஆக்கிரமிப்பு மற்றும் தூர்ந்து போய் இருப்பதைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாய்க்கால்களைத் தூர்வார முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த முயற்சியில் நிதி திரட்டி தூர்வாரும் பணிகளைச் செய்து வருகின்றனர். பல்லாண்டுகளாக கழிவுநீர் வாய்க்காலாக மாறி இருந்ததை தற்போது நன்னீர் ஓடும் வாய்க்கால்களாக மாற்றி இருப்பதாகக் கூறியுள்ள இளைஞர்கள், ஆக்கிரமிப்பால் வாய்க்கால் சூழ்ந்து இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்:


 25 கோடி மக்கள் வேலை இழப்பார்கள்: புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

3 கிலோ மீட்டர் தூரமும், 8 அடி அகலமும் இருந்த வாய்க்கால் 3 அடிக்கும் மேல் சுருங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலைக்கு பலர் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்ததே காரணம் என்றும் கூறுகின்றனர். வாய்க்கால்களைத் தூர்வாரினால் தங்கள் பகுதியில் உள்ள பாய் குளம், செட்டி குளம் உள்ளிட்ட 5 குளங்கள் நிரம்பும் என்றும், மக்களுக்கு நீர் ஆதாரம் உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள அப்பகுதி இளைஞர்கள், தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading