நாகை மீனவருக்கு சிக்கிய 250 கிலோ எடையுள்ள 'ஏ' ரக மீன்

நாகை மீனவருக்கு 14 அடி நீளமும் 250 கிலோ எடையுள்ள உயர் ரக மீன் சிக்கியுள்ளது.

நாகை மீனவருக்கு சிக்கிய 250 கிலோ எடையுள்ள 'ஏ' ரக மீன்
14 அடி நீளமும் 250 கிலோ எடையுள்ள மீன்
  • Share this:
நாகை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கரைப் பகுதியில் மட்டுமே சென்று மீன்பிடித் தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்த நேரத்தில் இடி மின்னலுடன் கடுமையாக மழை பெய்யவே அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இந்த நிலையில் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக மீன்பிடி வலையை படகுக்குள் இழுத்தபோது வலையோடு படகையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதால் அச்சமடைந்த மீனவர்கள் போராடி வலையை எடுத்தபோது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.


Also see:

 ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய ஏற்றுமதி ரக 'ஏ' மீன் சுமார் 14 அடி நீளமும் 250 கிலோ எடையுள்ள மீன் தங்களது வலைகளில் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் கரை திரும்பிய மீனவர்களுக்கு, படகிலிருந்து அந்த மீனை கரைக்குக் கொண்டு செல்ல பத்துக்கும் மேற்பட்ட சக மீனவர்களின் உதவி தேவைப்பட்டது. அதை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading