நாகையில் பழுதடைந்த பாலத்தின் ஓட்டையின் உள்ளே நுழைந்து மறுபக்கம் வெளியே வரும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அக்கரைக்குளம் பழமை வாய்ந்த தேவ நதி பாலம் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் மழை காரணமாக பாலத்தின் நடுவே ஆழ்துளை கிணறு போன்று பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள இளைஞர்கள், பொதுமக்களின் ஆபத்தான நிலையை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகள் விரைந்து சீரமைக்கவில்லை எனில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாலத்தை இடிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.