தமிழக முதலமைச்சரும்
திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை (Naan Mudhalvan scheme) தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் என் கனவு திட்டம் என்றும், மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்குரிய தகுதி பற்றாக்குறையாக உள்ளது. தனித்திறமைகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது என்று கூறிய முதல்வர், இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக இருக்கக்கூடாது என்றார்.
மேலும், நான் முதல்வன் என்று சொல்வது எளிது, ஆனால் அனைவரும் முதல்வானவது கடினம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் சொன்னார்கள் என்பதற்காக படிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் உயர்கல்வி பெறுவது எளிமையானது ஆனால் தனித்திறமை இல்லாதது அவர்களை வீழ்த்திவிடும் என்றும் கூறினார்.
அத்துடன், படிப்பு திறன் சார்ந்ததாகவும், வேலை திறமை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும், தமிழ் சமூகத்தின் இளைஞர்கள் தகுதி வாய்ந்த இளைஞர்களாக உருவாக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Must Read : மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பொதுக் குழு உறுப்பினரில் இருந்து முதல்வர் வரை.. கடந்து வந்த அரசியல் பாதை
இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள், உயர் கல்விக்கான
naanmudhalvan.tn schools.gov.in என்கிற இணையதளத்தை துவக்கிவைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.