ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக தான் உண்மையான சங்கி.. மேடையிலேயே செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்

திமுக தான் உண்மையான சங்கி.. மேடையிலேயே செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்

சீமான்

சீமான்

யார் சங்கிகள்? என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்தார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை 4 நாளில் வழக்கில் இருந்து வந்துள்ளார் இது தமிழக அரசுக்கு அவமானம் எனவும் திமுக அரசு தான் உண்மையான  சங்கி எனக்கூறி தன் காலில் இருந்த செருப்பை தூக்கி கான்பித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார்.

சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்?

அப்படி என்றால் யார் சங்கிகள்? என்று கடுமையாக விமர்சித்தார். அப்போது,  திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்தார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. "அண்ணன் திடீரென்று சந்திரமுகியை போல் மாறிவிட்டார்" என்று அந்த கட்சி தொண்டர்கள் புலம்பியபடி சென்றனர்.

மேலும் பேசிய சீமான் நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்று பேசியது  எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் ஒரு கட்சியின் தலைவர் பொது வெளியில் இப்படி கட்சி தொண்டர்கள் மத்தியில் மேடையிலேயே செருப்பை தூக்கி காண்பித்ததை பெரும்பாலானோர் ரசிக்க வில்லை என்பது அவர்களின் முகத்தில் தெரியவந்தது.

இதையும் படிங்க:  ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு - துரைமுருகன்

இதையும் படிங்க: 

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

செய்தியாளர்: கன்னியப்பன்

First published:

Tags: Naam Tamilar katchi, Seeman, Tamilnadu govt