Home /News /tamil-nadu /

தேர்தல் நேரத்தில் முதல்வர் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார்: செயல்படுத்துவதில்லை - சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் முதல்வர் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார்: செயல்படுத்துவதில்லை - சீமான் குற்றச்சாட்டு

சீமான்

சீமான்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுமனே திட்டங்களை அறிவிக்க மட்டுமே செய்கிறார். செயல்படுத்துவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி உத்தரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு  பகுதிகளில் வருகின்ற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘காஞ்சிபுரம் மண்ணில் பிறந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கும் இவர்கள், "சாராயம் விற்றுவரும் காசு குஷ்டநோய் உடனிருப்பவர்கள் கையில் இருந்து வரும் வெண்ணைக்கு சமம்" எனக் கூறிய அண்ணாவின் சொல்லுக்கு ஏற்ப அதே வேலையை தான் இக்கட்சிகள் செய்து வருகின்றன.

அரை நூற்றாண்டு மாறி மாறி ஆட்சி அமைத்து அடிப்படை கட்டமைப்பு கூட செய்யாமல் உள்ளதால் தான் சென்னை, மழை காலங்களில் தத்தளிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொண்டுவருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குலம் என கொண்டு வரவேண்டும்.

ஆளுநர் மாநில அரசுகளே ஆய்வு செய்வது முறையல்ல. ஆளுநர் மாநில அரசை நீதி ஆய்வு மேற்கொள்வது தவறு. இந்திய அரசை குடியரசுத் தலைவர் ஆய்வு மேற்கொண்டால் அனுமதிப்பார்களா? அரசு சரியாக திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறதா என ஆளுநர் மேற்பார்வை செய்யலாம். அண்ணா கூறியதைப் போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர். நாமென்ன வீட்டு பாடமா எழுதித் தருகிறோம். அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு. ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மிரட்டப்படுவது அச்சுறுத்தப்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அதிமுக, பாமகவை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான், 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் வேட்பாளர்களை மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இளம் வயது வேட்பாளர்களை கடத்தி இருக்கிறார்கள். சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. இது கொடுங்கோன்மை.

மேற்குவங்க சட்டப்பேரவை முடக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்- விஜயதாரணி





இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம். நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம். தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல், இல்லாமல் நடைபெற வேண்டும்.


வார்டு உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் வந்தால் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே மேயர் உள்ளிட்ட பதிவுகளை பெறுவோம். மானம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவன் தமிழன்.

ஆனால் தமிழன் தான் அவமான சின்னமாக உலகம் முழுவதும் அலைகிறான். அதற்கு காரணம் திமுக கால்களில் விழ வேண்டும். உதயநிதி என்பவர் சாதாரண சட்டமன்ற உறுப்பினர்.
ஆனால் அனுபவம் மிகுந்த அரசியல் கட்சி தலைவர்கள் சட்டசபையில் அவரைப் பார்த்து குனிந்து கும்பிட்டு காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இதுவா சுயமரியாதைச் சுடர் என கேள்வி எழுப்பினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை அறிவிப்பு மட்டுமே செய்து வருகிறார். அதனை செய்யப்படுத்தவில்லை. தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றும் தேர்தலுக்கு, முன்பு 5 சவரன் நகை தள்ளுபடி என்றும் வெறும் வெற்று திட்டங்களாக உள்ளது. இவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆட்சி நிலையானது என்று ஆட்சியாளர்கள் நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இங்கு எதுவும் நிலை அல்ல, ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என சுவர் விளம்பரங்களில் எழுதிக் கொண்டிருந்தார்கள் ஆனால் இப்பொழுது எங்கே என கேள்வி எழுப்பினார்.
Published by:Karthick S
First published:

Tags: Local Body Election 2022, MK Stalin, Seeman

அடுத்த செய்தி