Home /News /tamil-nadu /

மோசமான நிதிநிலைமையை வைத்துக் கொண்டு எதற்கு இலவசம் எனும் ஏமாற்று? முதல்வருக்கு சீமான் கேள்வி

மோசமான நிதிநிலைமையை வைத்துக் கொண்டு எதற்கு இலவசம் எனும் ஏமாற்று? முதல்வருக்கு சீமான் கேள்வி

சீமான்

சீமான்

பல மடங்கு வரியை உயர்த்தியும், மதுவிற்பனையை இருமடங்கு அதிகரித்தும் நிதிநிலைமை சரியாகவில்லை என்றால், அத்தனை மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? - சீமான்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மோசமான நிதிநிலைமையை வைத்துக் கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதலமைச்சர்.

    அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்தி, அதன் மூலம் அரசின் வருமானம் பெருகிவிட்டது என்று நிதியமைச்சர் கூறுவது பொய்யா? அல்லது இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது பொய்யா?

    Also Read : கடலூரை பாலைவனமாக்கும் என்எல்சி வெளியேறுக - அன்புமணி ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு

    பல மடங்கு வரியை உயர்த்தியும், மதுவிற்பனையை இருமடங்கு அதிகரித்தும் நிதிநிலைமை சரியாகவில்லை என்றால், அத்தனை மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம்தானே? அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்? என்றுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CM MK Stalin, DMK, Naam Tamilar katchi, Seeman

    அடுத்த செய்தி