• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சூர்யா சூப்பர், ஆனால் தம்பி விஜய்க்கு நான் சொல்வது ஒன்று தான்! - சீமான்

சூர்யா சூப்பர், ஆனால் தம்பி விஜய்க்கு நான் சொல்வது ஒன்று தான்! - சீமான்

சீமான்

சீமான்

முல்லை பெரியாறு அணை தொடர்பாக பேச தமிழ்நாட்டில் இருக்கும் நடிகர்கள் பயப்படுகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கு குரல் கொடுக்க தமிழ் நடிகர்கள் முன்வர வேண்டும் என நீங்கள் சொல்ல என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இங்கு குரல் கொடுக்க அனைவரும் பயப்படுகிறார்கள். வனபாதுகாப்பு சட்டம் குறித்து தம்பி கார்த்தி மட்டும் தான் குரல் கொடுத்தார். கல்வி கொள்கையை பற்றி சூர்யா மட்டும் தான் பேசினார். அதற்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கு நான் தான் மல்லுக்கட்ட வேண்டியதாக இருந்தது.

    கேரளாவில் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை. அங்கிருக்கும் நடிகர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கு, அதனால் துணிந்து பேசுகிறார்கள். இங்கே இருக்கும் நடிகர் பயப்படுகிறார்கள். எங்கு வருமான வரித்துறை ரெய்டு வந்துவிடுமோ, தியேட்டர் கொடுக்கமாட்டர்களோ என்று அச்சப்படுகிறார்கள். என்னோடு நடிப்பதற்கே சிலர் பயப்படுகிறார்கள. தயாரிப்பாளர்கள் என்னை பார்த்து அச்சப்படுகிறார்கள்.



    சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை நானும் பார்த்தேன். படம் அருமையாக உள்ளது. இதுப்போன்று படம் நடிப்பதற்கு சூர்யா போன்று தைரியம் வேண்டும். இதுப்போன்ற படங்களில் சூர்யாவை தவிர வேறும் யாரும் நடிக்க முயற்சிக்க மாட்டார்கள். நடிகர்கள் துணிந்து பேச வேண்டும்.தம்பி விஜய் பேசலாம், அவருக்கு இருக்கும் உயரம் அவருக்கே தெரியவில்லை. ஆரம்பத்தில் பேசிவிட்டு பிறகு பின்வாங்குகிறார்.

    உன் நாடு, உன் இனம், உன் மக்கள் என இருக்கும் போது துணிந்து பேச வேண்டும். யாரை பார்த்து பயப்பட வேண்டும். விஜய் கார் வாங்கிய போது இருந்த பிரச்சனைக்கு நான் தான் குரல் கொடுத்தேன்.  என் தலைவன் சொல்வதை போன்று தான், முதலில் அச்சத்தை கைவிடு இல்லையென்றால் லட்சியத்தை கைவிடு என்றார்.  இதைதான் தம்பி விஜய்க்கு நான் சொல்ல விரும்புகிறேன் என்றார். மேலும் பல வாதங்களை சிறப்பு நேர்காணலின் போது சீமான் முன்வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: