• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘100 நாளில் தீர்வு.. சாவி தொலைஞ்சதா.. இல்ல பெட்டி தொலைஞ்சதா’- திமுக-வை நோக்கி கேள்வி எழுப்பும் சீமான்

‘100 நாளில் தீர்வு.. சாவி தொலைஞ்சதா.. இல்ல பெட்டி தொலைஞ்சதா’- திமுக-வை நோக்கி கேள்வி எழுப்பும் சீமான்

சீமான்

சீமான்

தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் தி.மு.க ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள் என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தின் பிரச்னைகளை தி.மு.க தீர்த்துவிட்டதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தேர்தல் பரப்புரையின் போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார்.

    Also Read: சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் - தளர்வுகளே நாளைக்குதான் வீட்டுக்கு போங்கன்னு அனுப்பிய போலீஸார்

    தமிழக முதல்வராக நான் பதவியேற்ற 100 நாள்களில் போர்க்கால அடிப்படையில் அந்த மனுக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் அதற்காக ஒரு அதிகாரியையும் நியமித்தார். இந்நிலையில் ஸ்டாலின் தமிழகத்தின் பிரச்னைகளை தீர்த்து விட்டாரா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

     



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான், “தி.மு.க தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் தி.மு.க ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள்.50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

    Also Read: ’ஜெய்ஹிந்த் சொல்வதில் பெருமை’ - ட்விட்டரில் இந்திராகாந்தி உரையை பதிவிட்ட தமிழக காங்கிரஸ்

    என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: