வேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 7-ல் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது வேலூரிலும் 3-ம் இடம் பிடித்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்
சீமான் (நாம் தமிழர் கட்சி)
  • Share this:
வேலூர் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்துள்ளபோதும் மக்களவைத் தேர்தலில் பெற்ற சராசரி வாக்குகளை விட இந்த தேர்தலில் குறைந்த அளவிலேயே வாக்குகளைப் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தைக் கைப்பற்ற முட்டிக்கொண்ட கட்சிகள் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம். இதில், வேலூர் தேர்தலில் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் களத்திற்கு வராமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமியை வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1.1% வாக்குகள் பெற்று தனது பயணத்தை தொடங்கியிருந்த சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 3.8% வாக்குகளை பெற்று வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது.


வேலூரில் அந்தக் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார். இது மொத்த வாக்குகளில் 2.63%-தான் பெற்றுள்ளது. இது, மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது 2/3 பங்குதான்.ஆனால், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும்போது, இந்த வாக்கு சதவிகிதம் அதிகம். ஆம்பூரில் 1.81% வாக்குகளும், குடியாத்தத்தில் 2.29% வாக்குகளும் பெற்றிருந்தது.

தற்போது, அதைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும் வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 7-ல் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது வேலூரிலும் 3-ம் இடம் பிடித்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

First published: August 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்