• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தாய்மதம் திரும்புங்கள் என்று நான் யாரை சொன்னேன்? சீமான் ஆவேசம்

தாய்மதம் திரும்புங்கள் என்று நான் யாரை சொன்னேன்? சீமான் ஆவேசம்

சீமான்

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டியளித்தார்.

  • Share this:
    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் தாய் மதம் திரும்ப அழைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த சீமான், தாய் மதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தவே இல்லை. இந்த வீடியோவை தொகுத்து போட்டு அரைகுறையாக வெளியிட்டுள்ளனர். 2 நிமிடம் வீடியோவை பார்த்துவிட்டு மட்டும் பேசுகிறார்கள். பெரியார் கோட்பாடுடன் சொல்ல வேண்டுமென்றால் தமிழர்கள் தங்களை எப்போது இந்தியர்கள் என்று நினைத்தார்களோ அன்று பறிபோனது அவர்கள் உரிமை, தன்னை இந்து என்று எப்போது கருதீனார்களோ அப்போது மடிந்தது அவர்களது பண்பாடு என்றார்.

    செக்கு எண்ணெய்க்கு திரும்பி வந்தது போல திரும்பி வாருங்கள் என்று சொன்னது கிறிஸ்துவர்களையோ, இஸ்லாமியர்களையோ பார்த்து நான் அப்படி சொல்லவே இல்லை. இயற்கை வேளாண்மை, நஞ்சு இல்லா உணவு என்று அனைத்திற்கும் திரும்பும் போது, நமது சமயத்திற்கு திரும்புவோம். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களே சாதிய தொந்தரவு தாங்க முடியாமல் இங்கிருந்து சென்றவர்கள் தானே. நான் அவர்களை ஒருபோதும் கூப்பிடவில்லை. சிலர் தவறாக அப்படி புரிந்துக் கொள்கிறார்கள்.



    எனக்கு மதம் பார்த்து சாதி பார்த்து யாரும் ஓட்டுப் போடமாட்டார்கள். இனம், மொழிப்பற்று உள்ளவர்கள் தான் எனக்கு வாக்களிப்பார்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களைஸாமியர்களையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் பயமுறித்து வைத்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு நீங்கள் வாக்க அளிக்கவில்லை. ஆனால் இடங்களில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது எப்படி?

    நான் திமுகவையும். காங்கிரஸையும் எதிர்ப்பதால் பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. பாஜகவின் எந்த ஒரு திட்டத்திற்கும் நான் ஆதரவு தெரிவித்தது இல்லை. அவர்களை எதிர்த்து பல போராட்டங்களை முன் நடத்தி உள்ளேன். பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம். 10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிஸ் நாட்டுக்கு என்ன செய்தது. அவர்கள் நடத்திய ஊழல் ஆட்சி தான் பாஜக வெற்றி பெற காரணமாக இருந்தது என பல வாதங்களை சீமான் இந்த பேட்டியின் போது முன்வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: