நாடும் மக்களும் நன்றாக வாழ, நாம் தமிழர் ஆள வேண்டும் - சீமான்

நாடும் மக்களும் நன்றாக வாழ, நாம் தமிழர் ஆள வேண்டும் - சீமான்

சீமான்

திமுக, அதிமுகவை வெல்ல வைப்பது வழக்கமான நிகழ்வு, நாம் தமிழரை வெற்றிபெற வைப்பது ஒரு வரலாறு....

 • Share this:
  நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் நிரந்தரி, பர்கூர் தொகுதி வேட்பாளர் கருணாகரன், ஊத்தங்கரை தொகுதி வேட்பாளர் இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது சீமான் பேசுகையில், தேர்தல் அறிவித்த பின் முதல் கட்சியாக நாம் தமிழர் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது. தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாளக மாற்றி உள்ளனர். இதை நாங்கள் மாற்ற நினைக்கின்றோம். நான் தனித்து நின்று போராடுவதால்தான் என்னை பின் தொடர்ந்து அனைவரும் வருகின்றனர்.

  சரியான சமமான கல்வியை கொடுக்க நினைகின்றோம். தனி முதலாளிகளால் கல்வி, தண்ணீர் கொடுக்கும் போது அரசால் ஏன் செய்ய முடியாது? நாங்கள் கல்வி, தன்னீரை இலவசமாக கொடுக்க நினைக்கின்றோம். அதானிக்கு 5000 ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா பரித்து கொடுத்தார். மற்ற மாநிலங்களை விட கூடுதல் விலைக்கு மின்சாரத்தை ஜெயலலிதா வாங்கினார்.

  மண்ணையும், மக்களையும் நேசிப்பவர்கள் நாம் தமிழர் கட்சி தான். என்னை சீட்டுக்கு பேர பேசினேன், ஊழலுக்கு துனை போய்விட்டேன் என யாரும் கூற முடியாது. நான் வாக்குக்கு பணம் தர மாட்டேன் என்னிடம் கொடுக்க பணம் இல்லை, இருந்தாலும் பணம் கொடுத்து வாக்கு வாங்க மாட்டேன். வக்குக்கு பணம் கொடுக்க வந்தால் 5000 முதல் 10,000 வரை கேளுங்கள் அப்பொழுது தான் வக்களிப்பேன் என கூறுங்கள்.

  திமுக, அதிமுகவை வெல்ல வைப்பது வழக்கமான நிகழ்வு, நாம் தமிழரை வெற்றிபெற வைப்பது ஒரு வரலாறு. இந்த முறை சூரியன், இரட்டை இலையை மறந்து விவசாயியை நினைத்து வாக்களியுங்கள். ஒரு முறை 5 ஆண்டுகள் எங்களை நம்பி ஒப்படையுங்கள். விவசாயியை நன்றியுடன் நினைவு கூறுங்கள்.

  Must Read : ஓட்டுக்கு பணமா...? இதோ நாங்கள் வருகிறோம்!

   

  வாக்கு பதிவில் விவசாய சின்னத்தில் நன்றி என தொடுங்கள். நாடும் மக்களும் நன்றாக வாழ நாம் தமிழர் ஆள வேண்டும்.”  என்றார்.
  Published by:Suresh V
  First published: