Home /News /tamil-nadu /

ஆட்சிக்கு வருமுன் பிரதமர் மோடி பகையாளி், இப்போ விருந்தாளியா? திமுகவை சாடிய சீமான்

ஆட்சிக்கு வருமுன் பிரதமர் மோடி பகையாளி், இப்போ விருந்தாளியா? திமுகவை சாடிய சீமான்

சீமான், ஸ்டாலின்

சீமான், ஸ்டாலின்

பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ள நிலையில் திமுகவை விமர்சித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள், அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி?

    பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சீமான் பதிவிட்டுள்ளார்.

    2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

    இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை வர இருக்கிறார். மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. பிறகு தமிழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: MK Stalin, Seeman

    அடுத்த செய்தி