சீமான் வெற்றி பெறுவார்; எங்களை நாங்களே ஆள்வோம் - நாம் தமிழர் மேடையில் முழங்கிய பாரதிராஜா

சீமான் | பாரதிராஜா

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.

 • Share this:
  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் வழக்கம் போல எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இம்முறையும் தனித்தே போட்டியிடும் என அறிவித்த சீமான் 234 தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்தார்.

  அதில் 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களும் இடம்பெறுகின்றனர். சீமான் இந்தமுறை எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சென்னை திருவெற்றியூர் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

  சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “நான் தமிழன் அதனால் தான் நாம் தமிழர் மேடையில் நிற்கிறேன். சீமான் பேச்சாளர் மட்டும் அல்ல செயல்படுவார். அவர் யாராலும் தடுக்க முடியாத தனி சக்தி. சீமான் வெற்றி பெருவார் எங்களை நாங்களே ஆள்வோம்” என்றார்.

  மேலும் இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு ஆவணமாக வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: