தந்தையானார் சீமான்!

‘புலி பிறந்தான்’ என்று நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Web Desk
Updated: January 11, 2019, 9:27 PM IST
தந்தையானார் சீமான்!
குழந்தையுடன் சீமான்
Web Desk
Updated: January 11, 2019, 9:27 PM IST
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சீமான், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரசியல் களத்தில் செயலாற்றி வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சீமான் - கயல்விழி இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமானுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ‘புலி பிறந்தான்’ என்று நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

சீமான் வளர்ந்த கதை..
Loading...
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...