மறைந்த தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத சீமான்

சீமான்

சிவகங்கையில் உயிரிழந்த தந்தையின் உடலைப் பார்த்து சீமான் கதறிஅழுதார். அந்தச் சம்பவம் மனதை உருக்கும் வகையில் இருந்தது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட அரணையூர் கிராமம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொந்த ஊர் ஆகும். இவரது தந்தை பெயர் செந்தமிழன். அவருக்கு வயது 92. தாயார் பெயர் அன்னம்மாள். சீமானின் தந்தை செந்தமிழன் ஒரு விவசாயி. இவர்களுக்கு 5 பிள்ளைகள். முதல் பிள்ளையான மரியநாகையன் அரணையூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். 2-வது பிள்ளையான சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். சீமானுக்கு அடுத்ததாக இரு தங்கைகள் அருளாயி, அன்பரசி. கடைசியாக இளைய மகன் இளையதம்பி சென்னையில் வசிக்கிறார்.

  இந்நிலையில் சீமானின் தந்தை செந்தமிழன் வயது மூப்பின் காரணமாக இன்று மதியம் 2.30 மணியளவில் காலமானார். சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

  தந்தை இறந்தவுடன் சென்னையிலிருந்து அவசரமாக சிவகங்கை வந்தார் சீமான். தந்தையின் உடலைப் பார்த்த சீமான், கதறி அழுதார். அது பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் இருந்தது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: