• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர் - சந்திரபாபு நாயுடு

மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர் - சந்திரபாபு நாயுடு

மு.க ஸ்டாலினை சந்தித்த சந்திரபாபு நாயுடு

மு.க ஸ்டாலினை சந்தித்த சந்திரபாபு நாயுடு

பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பல மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் இன்று சந்தித்து பேசினார்.

பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் உடன் கை கோர்ப்பதாக அறிவித்தார்.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாலர் சீத்தாராம் எச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, கூட்டணி தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரை நேற்று சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக ஆலோசித்தார். ராகுல் காந்தி உடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போதே, திமுகவுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார்.

சென்னைக்கு இன்று வருகை தந்த சந்திரபாபு நாயுடு, ஆழ்வார்பேட்டையில் மு.க ஸ்டாலின் இல்லத்தில் அவருடன் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். டி.ஆர் பாலு, கனிமொழி, துரை முருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “நாட்டின் நலன் கருதி கருத்து வேறுபாடு உள்ள காங்கிரஸ் உடன் இணைகிறோம். எங்களது அணியின் தலைவரை பின்னர் முடிவு செய்வோம். பல தகுதியான தலைவர்கள் உள்ளனர். மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர். ஆளுநர்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு பயன்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் அரசாங்கமே இல்லை. ரிமோட் கண்ட்ரோலில் இயங்கி வருகிறது” என்று பேசினார்.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: