• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கர்நாடகாவைப் புரட்டிப் போட்ட மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் - தமிழகத்தைச் சேர்ந்த5 பேரை கைது செய்த காவல்துறை

கர்நாடகாவைப் புரட்டிப் போட்ட மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் - தமிழகத்தைச் சேர்ந்த5 பேரை கைது செய்த காவல்துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை கர்நாடகா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

  • Share this:
    கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து நபர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் மைசூரு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கல்லூரி மாணவி ஒருவர் சாமுண்டி அம்மன் கோவில் அருகே தனது ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கினர். அதனையடுத்து, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க கர்நாடக காவல்துறை 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. இந்த வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு எந்தவித தகவலும் தர மறுத்த நிலையில் காவல்துறை குற்றம் நடைபெற்ற இடத்தில் உள்ள செல்போன் டவரை ஆய்வு செய்ததில் குற்றம் நடந்த அதே நேரத்தில் ஐந்து நபர்கள் அதே பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனடிப்படையில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை செய்தபோது 5 செல்போன் எண்களும் தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் தனிப்படையினர் தமிழகம் சென்று தலைமறைவாக இருந்த ஐந்து நபர்களையும் கைது செய்து மைசூர் அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் கூலி வேலை செய்பவர்கள் என்றும் ஐவரில் ஒருவர் மைனர் 17 வயது மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கர்நாடக டிஐஜி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நாளன்று இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவியுடன் வந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியின் செல்போனை பறித்து மாணவியின் தந்தையை தொடர்பு கொண்டு மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் உனது மகளை விட்டுவிடுகிறேன் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பணம் கொடுக்க மாணவியின் தந்தை ஒப்புக்கொள்ளாததை அடுத்து ஐந்து நபர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக பதுங்கி இருந்துள்ளனர். தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தற்பொழுது குற்றம் நடந்து நான்காவது நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு 5 லட்ச ரூபாய் வெகுமதி அளிப்பதாக கர்நாடக டிஐஜி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: