Home /News /tamil-nadu /

பாஜக வேட்பாளர் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. ஹெல்மெட் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.!

பாஜக வேட்பாளர் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. ஹெல்மெட் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.!

பாஜக தொண்டர்கள் 76 வது வார்டில் ஹெல்மெட் அணிந்து, கைகளில் தாமரை பூவுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

    கோவை தெலுங்குபாளையம் பகுதியில் நேற்று பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் எதிரொலியாக இன்று பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி செல்வபுரம் பகுதி 76 வது வார்டு பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர்  கார்த்திக். நேற்று இரவு இவர் மற்றும் பாஜக தொண்டர்கள் தெலுங்குபாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் பொழுது சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று வேட்பாளர் கார்த்திக் மற்றும் பாஜக தொண்டர்கள் 76 வது வார்டில் ஹெல்மெட் அணிந்து, கைகளில் தாமரை பூவுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்வதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

    மேலும் படிக்க: ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்க நினைக்கிறது.. திருமாவளவன் வேதனை!!

    நேற்று பாஜகவினர் மீது கல்வீச்சு நடைபெற்ற நிலையில், இன்று பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்தது வியப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் - கோவை ஜெரால்ட்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, Coimbatore

    அடுத்த செய்தி