Home /News /tamil-nadu /

கஞ்சா கேட்பது போல் நாடகமாடி முன்னாள் கஞ்சா வியாபாரியிடம் 8 பவுன் தங்கச் செயின் திருட்டு

கஞ்சா கேட்பது போல் நாடகமாடி முன்னாள் கஞ்சா வியாபாரியிடம் 8 பவுன் தங்கச் செயின் திருட்டு

 கஞ்சா வியாபாரியிடம் 8 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

கஞ்சா வியாபாரியிடம் 8 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சா சேகர். இவர் பல வருடங்களுக்கு முன்பு கஞ்சா வியாபாரம் செய்துவந்தார். இவர் மீது பல வழக்குகள் உள்ளதாலும் வயது முதிர்வின் காரணமாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வியாபாரத்தை நிறுத்தியுள்ளார்.

    தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நேற்று மாலை கஞ்சா சேகர் தனிமையில் மரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம் இளைஞர் ஒருவர் வந்து கஞ்சா கேட்டுள்ளார். அதற்கு கஞ்சா சேகர் தான் இப்போது கஞ்சா விற்பது இல்லை என்று கூறியுள்ளார். வேறு எங்கு கிடைக்கும் என்று மர்ம நபர்கள் கேட்டுள்ளனர்.

    அதற்கு கஞ்சா சேகர் புதுக்கோட்டை பகுதியில் கிடைக்கும் இங்கு இல்லை என்று கூறியுள்ளார். அப்போது கஞ்சா கேட்ட மர்மநபர் சுற்றி பார்த்து விட்டு யாரும் அருகில் இல்லாததை உறுதி செய்து பின் கஞ்சா சேகர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தயராக நின்ற இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

    இதனையடுத்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கஞ்சா சேகர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cannabis, Crime | குற்றச் செய்திகள், Sivagangai

    அடுத்த செய்தி