சிதம்பரத்தில் தனியார் பள்ளி கட்டும் பணியில் வேலை செய்த இளைஞர் மர்ம சாவு - உறவினர்கள் சாலை மறியல்

கோப்புப்படம்

சிதம்பரத்தில் தனியார் பள்ளி கட்டும் பணியில் பிளம்பர் வேலை செய்த இளைஞர் மர்மான முறையில் இறந்ததையடுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Share this:
சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (34). ஒரு தனியார் பள்ளியில் ராமதாஸ் என்ற மேஸ்திரியிடம் பிளம்பராக இவர் பணிபுரிந்து வந்தார். வக்காரமாரி கிராமத்தில் நடந்துவரும் ஒரு கட்டடத்தின் பில்லர் அமைக்கும் பணியில் இவர் வேலை செய்து வந்த நிலையில், நேற்று அங்கிருந்த குழி ஒன்றில் தண்ணீர் பாய்ச்சும்போது மின்சாரம் தாக்கி விழுந்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று இளநாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் உறவினர்கள் அந்த தனியார் பள்ளி உரிமையாளர் மீதும் மேஸ்திரி ராமதாஸ் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.Also read: மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

இதையடுத்து பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து 20 நிமிடத்தில் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவரது உறவினர்கள், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இளவரசன் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து இறந்த இளவரசனின் மனைவி ஆனந்தி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Rizwan
First published: