சவுதியில் கள்ளக்குறிச்சி இளைஞர் மர்ம மரணம்.. சடலத்தை தாயகம் கொண்டு வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை

மாதிரிப்படம்

கடந்த 7-ஆம் தேதி விக்னேஷ் தங்கியிருந்த அறையில் கீழே அமர்ந்தபடி ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

 • Share this:
  சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி இளைஞரின் சடலத்தை தாயகம் கொண்டு வர தமிழக அரசு உதவவேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த மாலதி - ரங்கசாமி தம்பதியின் மகன் விக்னேஷ். 28 வயதான இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், மாதம் 25 ஆயிரம் ஊதியத்திற்கு பணியாற்றி வந்தார். அவரது தந்தை ரங்கசாமியும் சவுதி அரேபியாவில் வேறு ஒரு நிறுவனத்தில் கூலித்தொழில் செய்து வருகிறார்.

  கடந்த 7-ஆம் தேதி விக்னேஷ் தங்கியிருந்த அறையில் கீழே அமர்ந்தபடி ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து விக்னேஷின் தந்தை ரங்கசாமிக்கு சக நண்பர்கள் தகவல் அளித்தனர்.

  Also Read : ”டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” - தாலிபான்கள்!

  பின்னர், அங்கு வந்த ரங்கசாமி தனது மகனின் மரணம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், விக்னேஷின் மரணம் குறித்து விசாரணை நடத்தவும், உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானின் அலுவலககளில் புகார் அளித்துள்ளனர். ஆனால் 10 நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

  Also Read : ஆவடியில் உதயநிதி நிகழ்ச்சி.. கொட்டும் மழையில் டிராஃபிக்கை சரிசெய்த உதவி கமிஷனர்

  விக்னேஷ் மரணம் குறித்து தனியார் நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், உடலை தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: