கரூரில் பெண் மர்மமாக உயிரிழப்பு... பெற்றோர் கதறல்.. கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

Youtube Video

கரூர் மாவட்டத்தில், வரதட்சணையாக கார் கேட்டு கணவனே மனைவியை கொன்றுவிட்டதாக, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் சாதிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், வெண்ணிலா தம்பதி. காவேரிப்பட்டினம் ஒன்றியம் தாமோதரஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவராக வெண்ணிலா உள்ளார். இந்த தம்பதியின் மகள்தான் 26 வயதான பவித்ரா. பவித்ராவுக்கும், கரூர் மாவட்டம் வாங்கல் அக்ரஹாரத்தைச் சேர்ந்த 29 வயதான பொறியாளர் பிரகாஷ் குமாருக்கும் ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பவித்ராவுக்கு 40 சவரன் நகைகள் மற்றும் சீர் வரிசைகளை பெற்றோர் அளித்தனர்.

  கடந்த சில மாதங்களாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்த பிரகாஷ் குமார், கடந்த ஒரு மாதமாக கார் வாங்கித் தரும்படி கூறி பவித்ராவைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க...சவுகார்பேட்டை கொலைச் சம்பவம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜுவ் துபே கைது..  இந்த நிலையில், சனிக்கிழமை இரவு கணவன் வீட்டில் பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்குத் தகவல் கிடைத்தது. பவித்ராவின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் கணவனால் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

  மேலும், கணவரைக் கைது செய்யும்படி கோரி, அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பவித்ரா மரண வழக்கை கொலை வழக்காக மாற்றும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆர்டிஓ விசாரணை முறையாக நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பின் மறியல் கைவிடப்பட்டது. போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: