என் வழி எம்.ஜி.ஆர். வழி... எம்.ஜி.ஆர்.-ஐ போலவே ‘ரசிகர்’ தொடங்கிய கட்சியை ஏற்கிறாரா ரஜினி?

Youtube Video

ரஜினிகாந்த் கட்சியின் பெயர் "மக்கள் சேவை கட்சி" என்றும், அவரது சின்னம் "ஆட்டோ" என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தொண்டர் தொடங்கிய கட்சியில் இணைந்த எம்.ஜி.ஆரைப் போலவே, ரஜினியும் செயல்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
    புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றத்தை "ரஜினி மக்கள் மன்றம்" என்றும் பெயர் மாற்றினார். இதனைதொடர்ந்து கடந்த 3ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்படும் என கூறினார்.

    இதற்கிடையே ரஜினி கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் திங்கள் அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், "மக்கள் சேவை கட்சி" என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளதும், அதன் தலைவராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த புதிய கட்சிக்கு "ஆட்டோ" சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. பாபா முத்திரை சின்னமாக ஒதுக்க விண்ணப்பதாரர் கேட்டிருந்த நிலையில், அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில், கட்சிப் பதிவு செய்வதில், 48 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.ஜி.ஆர்.பின்பற்றிய அதே பாதையை ரஜினியும் தேர்வு செய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1972-ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ரசிகர் மன்றங்களை கட்சிக்கிளைகளாக மாற்றினார். பிறகு புதிய கட்சி தொடங்க விரும்பிய அவர் தனது தீவிர தொண்டரான அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவு செய்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியில் உறுப்பினரானார்.

    'எளிய தொண்டன் உருவாக்கிய கட்சியில் இணைத்துக்கொண்டேன்' என எம்.ஜி.ஆர் அப்போது அறிவித்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தலைமையில், முறைப்படி அதிமுகவின் தொடக்க விழா அக்டோபர் 17, 1972-இல் நடந்தேறியது. பின்நாளில் அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

    மேலும் படிக்க...ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகள் சமைத்து சாதனை படைத்த சிறுமி..

    இதைப் போலவே நடிகர் ரஜினிகாந்தும், அவரின் ரசிகர் தொடங்கியிருப்பதாக சொல்லப்படும் ‘மக்கள் சேவை கட்சி’ யை ஏற்று அரியணையில் ஏறுவாரா என்ற கேள்வி, மக்களிடையே எழுந்துள்ளது. எர்ணாவூரை தலைமையிடமாக கொண்டு, ரஜினி ரசிகர் சார்பில் இந்த கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், ரஜினியின் பெயர் கட்சியின் தலவர் என இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்தநிலையில் கட்சியின் பெயர் குறித்து தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கவும் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: