பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வைத்த தமிழக மக்களுக்கு என் நன்றிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுகவை பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்த மக்களுக்கு என் நன்றிகள் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவை தலைவராக போட்டியின்றி தேர்வான அப்பாவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சபாநாயகராக பொறுப்பேற்ற அவரை முதல்வர் முக ஸ்டாலின், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பாராட்டி உரையாற்றினார்கள்.

  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பேரவை தலைவர் அவர்கள் இந்த இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும் போது என் நெஞ்சம் பூரிப்பு அடைந்து உள்ளது. ஊடக விவாதங்களில் கருத்தோடும், சுவையோடும் பேசும் உங்களை கவனிப்பவரில் நானும் ஒருவன்.

  சுதந்திரத்தின் அடையாளமாக நீங்கள் இன்று பேரவையில் அமர்ந்து உள்ளீர்கள்; தூய்மையின் அடையாளமாக வெள்ளை கதர் உடையுடன் அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த பேரவையை ஜனஒநாயக மாண்புடன் மரபு வழி நின்று நடத்துவீர்கள் என்பதில் யாருக்கும் எள் அளவும் சந்தேகமில்லை.

  தங்கள் தலைமையிலான இந்த அவையில் நாங்கள் செயல்படுவது பொற்காலமாக கருதுகிறோம்; ஆசிரியராக இருந்த நீங்கள் இன்று 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அவையின் முன்னவராக இன்று பதவியேற்று உள்ளீர்கள்.

  சட்டப்பேரவையை அதிகார அமைப்பாக கருதாமல் சமூகத்திற்கு நல்லது செய்யும் அவையாக கருதவேண்டும்; கருத்துக்களை கருத்துகளாக எதிர்கொள்ளும் வல்லமை உண்டே தவிர அதில் வன்மம் இருக்காது.

  தமிழக மக்கள் கொடுத்துள்ள இந்த வெற்றி எங்களை மேலும் மேலும் கட்டுப்பாடு உள்ளவர்களாக மாற்றி உள்ளது; அவையில் எவ்வித விரோத உணர்ச்சிக்கு வழிகொடுகமால் ஆளுக்கட்சி செயல்படும்.

  சட்டப் பேரவையின் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள கு.
  பிச்சாண்டி அவர்களை மனதார வாழ்த்துகிறேன்; அனைவரிடமும் பாசத்துடன் பழக கூடியவர்.

  தனிப்பட்ட வருத்தம், எனக்கு நீங்கள் அவை தலைவர் என்பதால் கட்சியின் அரசியல் சூழலை பயன்படுத்தி கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. கழக பணி செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தம் இருந்தாலும் கூட இந்த இடத்திற்கு நீங்கள் தான் பொருத்தமானவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.
  Published by:Vijay R
  First published: