ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதல்... திருமணம்... மனம் திறந்த அண்ணாமலை!

காதல்... திருமணம்... மனம் திறந்த அண்ணாமலை!

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

    என்னுடைய திருமணம், காதல் திருமணம்தான், ஆனால் பெற்றோர் சம்மத்தோடுதான் திருமணம் செய்துகொண்டோம் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், பாஜக கூட்டணியில் யார் யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க பக்கம் தான் வரணும் என்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    தொடர்ந்து விசிக, மதிமுக கூட கூட்டணியில் இணைந்தால் சரியா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சாதியில்லா சமூகத்தை திருமாவளவன் உருவாக்க வேண்டும், அப்படி மாறினால் அவரும் எங்கள் கூட்டணியில் இணைய சரியானவரே என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து அதிமுக பிரச்சனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக பிரச்சனை உட்கட்சி பிரச்சனை, அதில் பாஜக தலையிட முடியாது என கூறியுள்ளார்.

    இதையும் படிங்க | ''ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு.. தீவிரவாத தாக்குதல்..'' கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்கு அண்ணாமலை அறிக்கை!

    மேலும், தமிழ்நாட்டில் ஏன் இன்னும் பாஜக ஒரு பெரிய இடத்திற்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வளவு நாட்களும் அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, இப்படி பெரிய ஆளுமைகள் இருந்ததால், எதுவும் செய்யமுடியவில்லை. இவர்களை எதிர்த்து யாராலும் ஆட்சி செய்யவே முடியாது என்று இருக்கும் சூழலில் பாஜக மட்டும் எப்படி மேலே வரமுடியும். அதனால் தான் வரமுடியவில்லை, ஆனால் தற்போது மக்களோடு ஒன்றிணையும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் திமுக vs அதிமுக, மட்டும் தான் இருக்கையில் பாஜக Vs என்று வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்களும் உங்கள் பங்காளி தான், மூவரும் ஒன்றாக பங்காளி சண்டை போடலாம் என கூறினார்.

    அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா எது பெரிய கட்சி என்ற கேள்விக்கு, அதிமுக தான் பெரிய கட்சி, கருத்தியலில் திமுகவுக்கும் தங்களுக்கும் போட்டி வருகிறது. ஆனால், கட்சியை பொறுத்தவரை அதிமுகவே பெரிய கட்சி என தெரிவித்துள்ளார்.

    அடுத்த தேர்தலில் நீங்கள் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தனக்கு விருப்பமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு பாஜகவை தமிழகத்தில் கொண்டு வருவது தான் எனது இலக்கு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

    இப்படி ஒரு சூழ்நிலையில் 2026க்கும் எப்படி பாஜக தமிழகத்தில் வரும் என்ற கேள்விக்கு நம்பிக்கை தான் எல்லாம், மக்கள் நம்பினால் ஒரே இரவில் அனைத்தும் மாறிவிடும் என கூறினார்.

    ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஒருவர் ஊழல்வாதி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார், முதுகில் குத்துபவர் என்ற பெயர் தான் பெற கூடாது, ஆடு என்பது விவசாயம் தானே அதுனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

    அலுவல் மொழி 100 சதவீதம் வந்துவிட்டால் பாஜக எதிர்க்குமா ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமித்ஷா அப்படி கூறவில்லை. தவறாக புரிந்து விட்டார்கள். தமிழை வளர்ப்போம் கண்டிப்பாக என கூறியுள்ளார்.

    தொடர்ந்து, நீங்கள் தமிழனா கன்னடனா என்ற கேள்விக்கு, முதலில் இந்தியன், 2வது தமிழன், 3வது இந்தியாவில் எங்கெல்லாம் பயணித்தேனோ அதை சொல்வேன் என கூறினார்.

    நீங்கள் சமீபத்தில் கவனிக்க கூடிய தலைவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, சீமான், உதயநிதி ஸ்டாலின், ரவிக்குமார், அன்புமணி ராமதாஸ் இவர்களின் மாறுபட்ட கருத்துக்களை பார்ப்பேன் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளோர்.

    நீங்கள் காதல் திருமணா என்ற கேள்விக்கு ஒரே பள்ளி, கல்லூரியில்தான் படித்தோம்.  அதன் பிறகு கல்லூரி படிக்கும்போது காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.  love come arrange marriage என கூறியுள்ளார்.

    நீங்கள் Suggest செய்ய கூடிய திரைப்படங்கள் எது என கேட்டதற்கு, சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தேன் பிர்ம்மாண்டம் என்றும் காந்தாரா என்ற கன்னட திரைப்படம் பார்த்தேன் அற்புதமாக இருந்தது. இதை பார்க்கலாம் என கூறினார்.

    இதையும் படிங்க | இன்பம் தரும் தீபாவளி..தமிழகம் முழுவதும் களைகட்டிய பண்டிகை..

    படம் பார்க்க நேரமுள்ளதா என்ற கேள்விக்கு காரில் நீண்ட தூரம் செல்லும் போது,  விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது பார்ப்பேன் என கூறினார்.

    ஏற்கனவே ஒரு படம் நடித்துள்ளீர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, வற்புறுத்தலின் பேரில் தான் அந்த படத்தில் நடித்தேன். சம்பளம் கூட ரூ.1 தான் வாங்கினேன். எனக்கு நடிக்க தெரியாது, சினிமாவில் வரமாட்டேன் என கூறினார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Annamalai, BJP, News18 Tamil Nadu