’எனது ஆதார் எனது அடையாளம்' என இந்தியில் வாசகம் - தமிழ்ச்சொல் இந்தியில் பதிவிடுவதாக குற்றச்சாட்டு

ஆதார் அட்டை (மாதிரிப்படம்)

ஆதார் அட்டையில் ’எனது ஆதார் எனது அடையாளம்' என்ற தமிழ்ச்சொல் இந்தியில் பதிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் இந்தியில் வாசகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதார் அட்டையின் கீழ்ப்பகுதியில் 'எனது ஆதார் எனது அடையாளம்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநில மொழிகளில்தான் இந்த வாசகம் இடம்பெறும்.

  இந்த நிலையில், தமிழகத்தில் 50 ரூபாய் செலுத்தி ஆதார் விவரங்களை திருத்தம் செய்யும்போது, அதில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதாகவும், ஆனால் 'எனது ஆதார் எனது அடையாளம்' என்ற வார்த்தை மட்டும் இந்தியில் இடம்பெற்றுள்ளதென்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


  இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Rizwan
  First published: