வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலை யானைகள் முகாமில் புதிய கட்டுப்பாடுகள்

கோப்புப் படம்

வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்களுக்கு கடந்த 26-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. பசியின்மை ஏற்பட்டதுடன், சில நேரங்களில் இருமல் பாதிப்பும் இருந்தது. இதையடுத்து, பூங்காவில் உள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

  மேலும், மூக்கு சளி மற்றும் குடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய்களுக்கான தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம், நேற்று இரவு 6.15 மணிக்கு உயிரிழந்தது. அந்த சிங்கத்துக்கு நேற்று முன்தினம் முதல் சளி வெளியேறியதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சூழலில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. மேலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக முதுமலை யானை முகாமில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த முகாமில் 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. முகாமில் யானை பாகன்கள், உதவியாளர்கள், முகாமில் உள்ள வனத்துறையினர் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகள் மற்றும் வன விலங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஊழியர்கள், கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 27 வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கபட்டு வரும் நிலையில் காலை மற்றும் மாலை உணவு வழங்கும் நேரம் 2 மணி நேரமாக அதிகரிப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: