அதிமுகவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறது பாஜக - முத்தரசன் குற்றச்சாட்டு

அதிமுகவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறது பாஜக - முத்தரசன் குற்றச்சாட்டு

முத்தரசன்

பாஜக என்பது பேராபத்துக்குரிய கட்சியாகும், அந்த பேராபத்துக் குரிய கட்சி தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது...

  • Share this:
    அதிமுகவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க பாஜக முயற்சிப்பதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் முழுக்க முழுக்க பண பலத்தை  நம்பியே அதிமுக இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டுட்டினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக என்பது பேராபத்துக்குரிய கட்சியாகும், அந்த பேராபத்துக் குரிய கட்சி தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது.

    அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி அதிமுகவின் தோள் மீது இல்லாமல், தலையில் சவாரி செய்து கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

    அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் வகுப்புவாத கட்சியை தோற்கடிக்க வேண்டும். மேலும் வகுப்புவாத கட்சியை ஆதரிக்கும் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஒரு மகத்தான அரசியல் போராக இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    Must Read : பட்டியலின மணமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை (முழு விவரம்)

     

    தமிழகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த அரசியல் போரை முன்னெடுத்துள்ளோம்” என்று கூறிய அவர், ‘நடைபெற உள்ள இந்த தேர்தலை முழுக்க முழுக்க சொந்த பலம், கூட்டணி பலம் என எதையும் நம்பாமல் பண பலத்தை மட்டுமே நம்பி அதிமுக இருப்பதாகவும், “பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில்தான் அவர்கள் இருக்கிறார்கள், தமிழ்நாட்டு மக்கள் இதை நிராகரிப்பார்கள். அதிமுகவின் கனவு பகல் கனவுதான்” எனவும் முத்தரசன் அப்போது கூறினார்.
    Published by:Suresh V
    First published: