பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எந்த மட்டத்திற்கும் இறங்கும் - முத்தரசன்

பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எந்த மட்டத்திற்கும் இறங்கும் - முத்தரசன்

முத்தரசன்

6 சிலிண்டர் இலவசமாக கொடுத்து விட்டு மற்றொரு 6 சிலிண்டரில் பணத்தை ஏற்றி விடுவார்கள்.

 • Share this:
  இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது, பாஜகவினர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எந்த மட்டத்திற்கும் இறங்கி செயல்படுவார்கள் என்றும், கலவரத்தை தூண்டிவிட்டு கூட ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வார்கள் எனவும் கூறினார்.

  இது குறித்து, “விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து நடப்பதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆலை நிர்வாகி மற்றும் ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நடவடிக்கை எடுத்து பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.” என்றார்.

  தமிழகத்தில் ஆளும் கட்சியின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் 6 சிலிண்டர் இலவசம் என அறிவிப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை. 6 சிலிண்டர் இலவசமாக கொடுத்து விட்டு மற்றொரு 6 சிலிண்டரில் பணத்தை ஏற்றி விடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இந்த இலவசம் என்பது ஏமாற்று வேலை.

  மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எந்த மட்டத்திற்கும் இறங்கி செயல்படுவார்கள். கலவரத்தை தூண்டிவிட்டு கூட ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வார்கள் என்பதற்கு மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் அவரது பேச்சே உதாரணம். அதையும் சமாளித்து எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

  Must Read : தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு

   

  அதிமுகவின் தேர்தல் அறிக்கை கசிந்து விட்டது என எடப்பாடி கூறுகிறார். இதைக்கூட பாதுகாக்க முடியாதவர்கள் இவர்கள் என்றும், அதிமுக கட்சி மிகவும் பலவீனமான கட்சி எனவும் முத்தரசன் கூறினார்.
  Published by:Suresh V
  First published: