Home /News /tamil-nadu /

நல்லக்கண்ணு பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு - முத்தரசன் போலீசில் புகார்

நல்லக்கண்ணு பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு - முத்தரசன் போலீசில் புகார்

நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு

மூத்த தலைவர் நல்லக்கண்ணு பற்றி ஆபாசமாக சித்தரித்து களங்ப்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "சமீப காலமாக அரசியல் கட்சி தலைவர்களையும் கட்சிகளையும் இழிவுப்படுத்தி அவதூறு செய்யும் பதிவுகள் மலிந்து வருகின்றன.

இதன்மூலம் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து பகைமை உணர்வுகளை வளர்தெடுத்து சமூக மோதல்களையும் வன்முறைகளையும் உருவாக்கும் திட்டமிட்ட சதி செயல்களை நிறைவேற்றி கொள்ள ஒரு கும்பல் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இரா.நல்லக்கண்ணு படத்தை ஆபாசமாக சித்தரித்து அசிங்கப்படுத்தும் வார்த்தைகள் அடங்கிய முகநூல் பதிவு சமூக வலைதளத்தில் பரப்பபடுகிறது.

மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தலைவர் அவர். தூய்மையான எளிமையான வாழ்க்கையை களங்கப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் தீய எண்ணத்தோடு பரப்பப்படுகிறது.

Also read... ஸ்டாலின் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு துவங்கி அவதூறு பதிவு - நடவடிக்கை எடுக்க கோரி புகார்

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின் புகைப்படத்தையும் பெண் செயல்பாட்டாளர் ஒருவரின் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு புகார்கள் குறித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று செயல்படும் நபர்களை கைது செய்ய வேண்டும்" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி