ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழைபாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மழைபாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 75,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 75,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவைதவிர கரும்பு, வாழை, நிலக்கடலை, மிளகாய், கத்தரி, சக்கரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் மணவாசி, கட்டளை, மேல மாயனூர், கீழ மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

  இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல் மட்டுமின்றி, வாழை, நிலக்கடலை, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் நேரில் சென்று பாதிப்புகளை கணக்கெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

  கனமழை எதிரொலி : மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை! (news18.com)

  80% விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் வரும் 15-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், இதை இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

  மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை அரசே செலுத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Flood, Heavy Rainfall, Tamilnadu