சிதம்பரத்தில் கிள்ளை மாசிமக விழாவில் பூவராக சாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு...

சிதம்பரத்தில் கிள்ளை மாசிமக விழாவில் பூவராக சாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு...

மத நல்லிணக்கம்

சிதம்பரம் அருகே கிள்ளை தர்கா சார்பில் மாசிமக விழாவில் பூவராக சாமிக்கு பட்டாடை அணிவித்து சுவாமியை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. 

  • Share this:
சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடற்கரை பகுதியில் நேற்று மாசிமகத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த மாசிமகத் திருவிழாவில் கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்திலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பூவராகசுவாமி கிள்ளைக்கு வருகை புரிந்தனர். அப்போது பாரம்பரியமான நடைமுறைப்படி கிள்ளை தைக்கால் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிவாசல் நிர்வாகி சையது சகாப் தலைமையில் நூற்றாண்டு பாரம்பரிய முறைப்படி சுவாமிக்கு பட்டாடை சாத்தி தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர். இதில் இந்துக்களும் முஸ்லிம்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க... iPhone-ஐ ஏன் பயன்படுத்துவதில்லை? பில்கேட்ஸ் கூறும் சுவாரஸ்ய தகவல்

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நிகழ்ச்சி


இதையடுத்து பூவராகசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ரகமத்துல்லா தர்காவில் நாட்டு சக்கரை வைத்து படையல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து பள்ளி வாசல் நிர்வாகி சையது சகாப் கூறுகையில்,”நூற்றாண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் இன்று கிள்ளைக்கு வந்த பூவராகசாமிக்கு பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தப்பட்டதாகவும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் தொன்று தொட்டு இந்த விழா நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: