Home /News /tamil-nadu /

மியூசிக்கலி விபரீதம்: கேலி செய்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

மியூசிக்கலி விபரீதம்: கேலி செய்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

தற்கொலை செய்துகொண்ட கலையரசன்

தற்கொலை செய்துகொண்ட கலையரசன்

மியூசிக்கலி டிக்டாக் ஆப் மூலம் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் கலையரசன் என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

  • News18
  • Last Updated :
    மியூசிக்கலி என்ற செயலியில் இன்றைய இளைஞர்கள் தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்-ல் வித்தியாசமாக வேடம் அணிந்து சினிமா வசனங்களுக்கு நடித்துக் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றுவது தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் பெண் குரலில் பாடல்களை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் விமர்சித்துள்ளனர். அதற்கு தன்னை பெண்ணாக நினைத்து கிண்டல், கேலி செய்தாலும், நான் தொடர்ந்து பெண் குரலில் பாடுவேன் என்று அவர் கூறியதாக கலையரசனின் நண்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அவர் பெண் குரலில் பாடுவதை அவரது குடும்பத்தாரிடமும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கலையரசனின் பாடல் மற்றும் நடிப்பை பெண்களோடு ஒப்பிட்டு விமர்சனம் எழுந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

    மியூசிக்கலி ஆப் மூலம் பெண்குரலில் பாடல் பாடிய ஒருவர் மீது சமூக வலைதளவாசிகள் வைத்த விமர்சனம் ஓர் உயிரை பறித்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    See Also:
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Chennai, Musically app, Suicide, Tiktac app

    அடுத்த செய்தி