இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் குறித்து சர்ச்சையான விதத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தியாவில் பல மொழிகளில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழிலும் அறிமுகமாகியது. வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த பிக்பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்கள், பிக் பாஸ் சென்றால் வாய்ப்புகளை பெறுவதோடு, சமூக வலைதளங்களில் தங்களுக்கான ஆர்மிக்களையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்பதால் பிக் பாஸ் போவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் பிரபலங்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பார்வையாளர்களின் கவனத்தைப் பெறுவது ஒருவழி என்றால், பிக் பாஸை விமர்சனம் செய்து, ரசிகர்களை ஈர்ப்பது இன்னொரு வகை. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன்.
இவரின் விமர்சனத்துக்கு என்றே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில், ‘நேற்று இரவு ஒரு முன்னாள் Bigg Boss நிகழ்ச்சி பங்கேற்பாளர் ஒரு விபத்தில் இறந்து போவதாக கனவு கண்டேன். T. Nagar-ல் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் 5-வது மாடியில் இறுதிச் சடங்கு நடக்கிறது. நான் அவரைக் குறித்து எதுவுமே சிந்தித்தது கூட கிடையாது. எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. நேரில் சந்தித்திருக்கிறேனா என்பது கூட நினைவில்லை. இது எப்படி நிகழ்ந்தது?’ எனக் கேட்டிருந்தார்.
மேலும் படிக்க - பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ’நான் ஈ’ நடிகை ஹம்சா நந்தினி
இந்தப் பதிவு ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்த மறுபுறம் சில ரசிகர்கள், ‘நீங்கள் எப்போதும் பிக் பாஸையே நினைத்துக் கொண்டிருப்பதால் தான், இந்த மாதிரியான கனவு வருகிறது என’ தங்கள் கருத்தையும் அதில் தெரிவித்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.